×

வின்டேஜ் ஃபேஷன்!

பழசுக்கு எப்போதும் மவுசுதான். அப்படியிருக்க ஃபேஷன் உலகம் மட்டும் எப்படி சும்மா இருக்கும்?! பழைய ட்ரெண்ட், வின்டேஜ் என்னும் போர்வையில் இப்போது சுற்றிச் சுற்றி வருகிறது! பிறகென்ன... இதற்கு என்ன காரணம் விளக்கம் தர இரு ஃபேஷன் டிசைனர்ஸை பிடித்தோம். திவ்யா: சூழல் மாற்றம்தான் முதல் காரணம். வின்டேஜ் அல்லது க்ளாசிக் கலெக்‌ஷன்னு போயிட்டா அந்த மெட்டீரியல்ஸும் சரி அதுக்குப் பயன்படுத்தற கலர்ஸும் சரி ஓரளவு இயற்கையானது. அதாவது கெமிக்கல் குறைவா இருக்கும். எல்லாத்துலயும் இப்ப இயற்கையை நாட ஆரம்பிச்சுட்டாங்க இல்லையா... ஃபேஷன்லயும் அது எதிரொலிக்குது. இதுக்கான ஆரம்பம்தான் வின்டேஜ் ஸ்டைல்.

என் கான்செப்ட் கூட ஹேண்ட்லூம் கைத்தறி புடவைகள் அல்லது மெட்டீரியல்ஸ்தான். அதிகமா ஃபேஷன் டிசைனிங் செய்யறதும் இதுலதான். இதோ இங்க நடிகைகள் ஜனனி அய்யரும் ஆத்மிகாவும் போட்டிருக்கிற டிரெஸ்ஸையே எடுத்துப்போம். கைத்தறி மெட்டீரியல். அதுல டிசைன் செய்த மேக்ஸி. ஆக்சுவலா மேக்ஸிதான் ஃபேஷன் உலகத்துல ரொம்பவே ஆச்சர்யமான ட்ரெண்ட். ஏன்னா, மேக்ஸி 18ம் நூற்றாண்டுல அறிமுகமான உடை. இப்ப வரை பெண்களை மேக்ஸி கவர்ந்துட்டிருக்கு. வின்டேஜ்  ஃபேஷன்ஸ்ல பெரும்பாலும் இயற்கை முறை டையிங்தான்.

கெமிக்கல், மெஷின் வேலைகள் கிடையாது. இந்த டையிங் உடலுக்கு குளிர்ச்சியா இருக்கும். ராயல் லுக் கொடுக்கும். வின்டேஜ் ஃபேஷனோட முக்கிய நோக்கம் ஷோல்டர்தான். கம்பீரமா, ராயலா காட்டும். அதனாலேயே உடைகள்ல மட்டுமில்ல, நகைகள்லயும் டெம்பிள் கலெக்‌ஷன், ஆக்ஸிடைஸ்ட் கலெக்‌ஷன்னு பழைய ட்ரெண்ட்தான் இப்ப பிரபலம்!  தனு: எங்க ப்ளவுஸ் பெரும்பாலும் பஃப் கைகளா இல்லைனா 3/4 கைகளா இருக்கும். இது சங்க கால ஸ்டைல்! மன்னர் காலத்துல இருந்து தொடருது. ஹீரோயின்ஸ் முதல் சாதாரண பெண்கள் வரை இந்த பஃப் கை அல்லது 3/4 கை டிசைன்ஸுக்கு எப்பவும் ஸ்பெஷல் இடம் கொடுக்கறாங்க.

அவ்வளவு ஏன் நயன்தாரா பெரும்பாலும் பஃப் கைதானே பயன்படுத்தறாங்க? இதுக்கு காரணம், கைகளை கொஞ்சம் அகலமா உடலை விட்டு தனியா பஃப் ஸ்டைல் பிரிச்சுக் காட்டும். ப்ளவுஸ்ல மட்டுமில்ல, மேக்ஸி, சல்வார், அனார்கலினு எல்லா உடைகள்லயும் பஃப் பயன்படுத்தறதுதான் க்ளாசிக் ஸ்லீவ் ட்ரெண்ட் ஸ்பெஷல். இது நம்ம குடும்ப பின்னணிய ராயலா காட்டும். இனிமையான நினைவுகளைப் பிரதிபலிக்கும். ஒரே வார்த்தைல சொல்லணும்னா ட்ரெடிஷனல் போயிட்டாலே அது பெரும்பாலும் வின்டேஜ்தான். வின்டேஜ் மேக்கப் கூட முக வடிவத்தை எடுத்துக் காட்டும். அதே சமயம் லிப்ஸ்டிக் கொஞ்சம் பாந்தமா, பார்க்க ட்ரெடிஷனலா போட்டுக்கறது நல்லது!

மாடல்கள்: நடிகைகள் ஜனனி ஐயர் மற்றும் ஆத்மிகா
உடைகள்: தமாரா
மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்: அனிதா ஸ்ரீதர், வர்வ் சலூன்.                            
படங்கள்: அர்ஜுன் ஷங்கர், அனிதா காம்ராஜ்

- ஷாலினி நியூட்டன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!