தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது..அதனை நிரூபிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது என்று அமைச்சர் பாண்டியராஜன்  கூறியுள்ளார். கொரோனாவுக்கு சித்தா முறையில் மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி வந்த மருத்துவர் திருத்தணிகாசலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது, சித்த மருத்துவத்தின் மீது தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாக நீதிமன்றமும் கூறியிருந்தது. மேலும், கொரானாவுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், அலோபதி என்ற பெயரில் கபசுர குடிநீர்தான் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். எனவே, சித்த மருத்துவத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

இந்த நிலையில், சித்த மருத்துவ நிபுணர்களை இன்று சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், அவர்களிடம் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ முறைகள் பற்றி கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் ஓசியா அவர், பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக்கூடியது.  தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனை நிரூபிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் இதுவரை 80% பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். பிற மாவட்டங்களிலும் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார், என கூறியுள்ளார்.

Related Stories: