தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ ஆய்வு

தூத்துக்குடி: தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சிறைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன் ஜெயராஜ், பென்னிக்ஸிற்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. ஜெயராஜ், பென்னிக்ஸிற்கு மருத்துவ பரிசோதனை செய்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். முன்னதாக ஜெயராஜ் வீட்டில் 4 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது.

நேற்று சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கு ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரணை அதிகாரி அனில்குமார் வழக்கின் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். டெல்லியில் இருந்து 8 அதிகாரிகளை கொண்ட சிபிஐ குழு தூத்துக்குடி வந்தநிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் விசாரணைக்காக வந்துள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 1ம் தேதி வரை விசாரணை நடைபெற்று இதுவரை 10 நபர்களை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இரண்டு பேர் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரிமார்க் செய்யப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, சாத்தன்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: