கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும்: மத்திய அமைச்சகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் உறுப்பினர்கள், அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் மத்திய அரசின் பிற மூத்த அதிகாரிகளுடன் நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் நிலவும் கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடையே உரையாற்றிய அவர், பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும். தொற்று பரவாமல் தடுப்பதில் தொடர்ச்சியான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். டெல்லியில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். அதிகம் பாதிப்புள்ள மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.  

Related Stories: