முதன்முறையாக ஒரே நாளில் 27,114 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது; 22,123 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது. உலகையே  ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 27,114 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 22,123 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 519  உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,15,386 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,873 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,38,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,893 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,32,625 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில்  உள்ளது. தமிழகத்தில் 1,30,261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,829 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 82,324 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,09,140 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 84,694 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 14,600 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 9,147 பேர் குணமடைந்தது.

பீகாரில் 14,575 பேருக்கு பாதிப்பு; 119 பேர் பலி; 10,109 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 539 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 408 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 3767 பேருக்கு பாதிப்பு; 17 பேர் பலி; 3028 பேர் குணமடைந்தது.

கோவாவில் 2,251 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 1347 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 40,069 பேருக்கு பாதிப்பு; 2022 பேர் பலி; 28,147 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 19,934 பேருக்கு பாதிப்பு; 290 பேர் பலி; 14,904 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 1,918 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1,372 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 6950 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 3820 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 23,174 பேருக்கு பாதிப்பு; 497 பேர் பலி; 17,620 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 3419 பேருக்கு பாதிப்பு; 23 பேர் பலி; 2224 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 1064 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 917 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,582 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 832 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 207 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 66 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 226 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 143 பேர் குணமடைந்தது.

நாகாலாந்தில் 732 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 304 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 11,956 பேருக்கு பாதிப்பு; 56 பேர் பலி; 7972 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 1272 பேருக்கு பாதிப்பு; 17 பேர் பலி; 637 பேர் குணமடைந்தது.

பஞ்சாப்பில் 7,357 பேருக்கு பாதிப்பு; 187 பேர் பலி; 5017 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 3,373 பேருக்கு பாதிப்பு; 46 பேர் பலி; 2,706 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 33,418 பேருக்கு பாதிப்பு; 543 பேர் பலி; 13,836 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 9888 பேருக்கு பாதிப்பு; 159 பேர் பலி; 5,786 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 32,224 பேருக்கு பாதிப்பு; 339 பேர் பலி; 19,205 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 27,109 பேருக்கு பாதிப்பு; 880 பேர் பலி; 17,348 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 33,700 பேருக்கு பாதிப்பு; 889 பேர் பலி; 21,787 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 25,422 பேருக்கு பாதிப்பு; 292 பேர் பலி; 13,194 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 335 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 120 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 16,657 பேருக்கு பாதிப்பு; 638 பேர் பலி; 12,481 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 1171 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 883 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 156 பேருக்கு பாதிப்பு; 92 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

தாதர் நகர் ஹவேலியில் 459 பேருக்கு பாதிப்பு; 211 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 134 பேருக்கு பாதிப்பு; 80 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

Related Stories: