ஈரானில் சிக்கியுள்ள 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!!

சென்னை: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம்  தற்போது ஈரானையும் வாட்டி வதைக்கிறது. இன்று வரை ஈரானில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,447 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,52,720 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,15,015 பேர்  குணமடைந்துள்ளனர்.

தற்போது, ஈரானில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் அங்கேயே தங்கி மீன்பிடித்து வருகின்றனர். அவர்களை சொந்த நாட்டிற்கு திரும்ப சென்று விடுமாறு படகுகளின் உரிமையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் போதிய அளவில்  விமானங்கள் இயக்கப்படாததால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

சீனாவின் வுஹான் நகருக்கும், ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கப்பலில் இருந்த இந்தியர்களை மீட்க இந்திய அரசு தனி விமானம் அனுப்பியது. இதே போல் ஈரானில் சிக்கி தவிக்கும் தங்களையும் மீட்டுவர சிறப்பு விமானம்  அல்லது கப்பலை அனுப்ப வேண்டும் என்று மீனவர்களும், அவர்களது உறவினர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அவைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதத்தில், ஏற்கனவே, தமிழக அரசு விடுத்த கோரிக்கையின் படி, ஈரானில் இருந்து தமிழக மீனவர்கள் 681 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு  தமிழகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் திரும்பி வர நடவடிக்கை எடுத்த மத்தியமைச்சர் ஜெயசங்கருக்கு நன்றி. மேலும், ஈரானில் சிக்கியுள்ள 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி கடிதத்தில் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

Related Stories: