திருத்தணி முருகன் கோயிலில் குரங்குகளுக்கு உணவு வழங்கல்

திருத்தணி:  ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம். மலைக்கோவிலில் அதிகளவில் குரங்குகள் கூட்டம் உள்ளன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு குரங்குகளுக்கு பழங்கள், பிரசாதங்களை வழங்கி மகிழ்வார்கள்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. பக்தர்கள் வருகையும் குறைந்துவிட்டது. இதனால் குரங்குகள் உணவு இல்லாமல் தவித்தன. இதுகுறித்து தினகரன் நாளிதழில் புகைப்படம் நேற்று வெளியிட்டது. இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் தற்போது குரங்குகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தற்போது குரங்குகள் பசியில்லாமல் சாப்பிடுகிறது.

Related Stories: