சிறுபான்மையினருக்கு கடன் திட்டங்கள்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஆண்டு தோறும் தமிழகத்தை சேர்ந்த சிறுபான்மையினருக்கு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, இந்தாண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் தொழில் கடன், கல்விக்கடன் சுய உதவிக் குழுக்களுக்கான சிறுகடன் உதவிகள் வழங்கப்படுகிறது. தனிநபர் தொழில் கடன் திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கவும் கடன் பெறலாம். சுயஉதவி குழுக்களுக்கான சிறு கடன் பெற  இக்குழுவில் குறைந்தது 60 சதவீத  சிறுபான்மையினர் இருத்தல் அவசியம்.

கடன்தொகை பெறுவதற்கு, 18 முதல் 60 வயது வரை இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமங்களில் வசிப்பவருக்கு ₹98 ஆயிரம், நகர்ப்புறங்களில் வசிப்பவருக்கு 1.2 லட்சம் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகம், காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: