பருவமழை துவங்குவதற்கு முன்னதாகவே ஏரி, கால்வாய்களை தூர்வாரி, சாலை வசதிகளை செய்ய வேண்டும்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில், பருவ மழை துவங்குவதற்கு முன்னதாவே, பேரிடர் நடவடிக்கையாக ஏரிகள் தூர்வாரும் பணி, ஏரிகளிலும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். சாலை, குடிநீர் வசதிகளை செய்ய வேண்டும் என திமுக சார்பில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில், காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எம்எல்ஏக்கள் செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, திருப்போரூர் இதயவர்மன்  ஆகியோர் செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸை சந்தித்து, மனுக்களை அளித்தனர்.பின்னர் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், ஆலந்தூர், ஆகிய தொகுதிகளில் பருவ மழை துவங்குவதற்கு முன்னதாக ஏரி, குளம், குட்டைகளின் வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். கால்வாய்களில் உள்ள ஆகாயதாமரைகளை உடனடியாக அகற்றவேண்டும். கிராமங்களில் நிலவும் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பிரச்னையை போர்கால அடைப்படையில் உடனடியாக தீர்க்க வேண்டும். கிராம பஞ்சாயத்தில் உள்ள ஊராட்சி செயலளர்கள் சரிவர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில்லை. இது சம்பந்தமாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 9 இடங்களில் சுத்திகரிக்கப்படட் குடிநீர் நிலையம், 2 இடங்களில் ரேஷன் கடைகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த கட்டிடங்களுக்கு மின் இனைப்பு வழங்காததால், பொதுமக்களுக்கு பயனில்லாமல் உள்ளது. திருப்போரூர் தொகுதியில், எம்பி செல்வம், தொகுதி மேம்பாட்டு நிதியில் 6 இடங்களில் நிறுவப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகளுக்கு இதுவரை மின் இணைப்புகள் வழங்கவில்லை. இதனால் பயனற்று கிடக்கிறது. இந்த கோரிக்கைகளை வலியுருத்தி கலெக்டரிம் பேசினோம். அவரும், உடனடியக நடவடிக்கை எடுத்து சரி செய்வதாக உறுதியளித்தார்.

மேலும், ஊரடங்கல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க ஏற்கனவே கொடுத்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது என்றார். அப்போது, திமுக நகரசெயலாளர் எஸ். நரேந்திரன் முன்னாள் நகர மன்ற தலைவர் அன்புச்செல்வன், ஆப்பூர் சந்தானம், சிலம்பு செல்வன், நகர இளைஞர்அணி செயலாளர் சந்தோஷ் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: