×

பல்கலை. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘கொரோனா பாதிப்பால், பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவும் (யுஜிசி) இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா வைரஸ் பல மக்களுக்கு வேதனை தந்துள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஐஐடி உள்ளிட்ட கல்லூரிகள் தேர்வை ரத்து செய்திருக்கும் நிலையில், யுஜிசி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே யுஜிசி நிர்வாகம் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் முந்தைய செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த நேரத்தில் தேர்வு நடத்துவது நிச்சயம் நியாயமில்லாதது. மாணவர்கள் குரலுக்கு யுஜிசி செவி சாய்க்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

Tags : University ,Rahul , University Examinations, Rahul
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...