ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்: டாப் 5 கேப்டன்களில் இடம் பிடித்தார் ஹோல்டர்

டெஸ்ட் போட்டிகளின் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் சாய்க்கும் சாதனையை அதிக முறை நிகழ்த்திய கேப்டன்கள் வரிசையில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாப் 5ல் இணைந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடைபெறும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அபாரமாகப் பந்துவீசிய ஹோல்டர் 20 ஓவரில் 6 மெய்டன் உட்பட 42 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தும் சாதனையை அவர் 7வது முறையாக நிகழ்த்தியுள்ளார் (56 இன்னிங்ஸ்). இதன் மூலம் பாகிஸ்தானின் இம்ரான் கான் (12 முறை, 71 இன்னிங்ஸ்), ஆஸ்திரேலியாவின் ரிச்சி பெனாட் (9 முறை, 56 இன்னிங்ஸ்), இந்தியாவின் பிஷன் சிங் பேடி (8 முறை, 39 இன்னிங்ஸ்), வெஸ்ட் இண்டீசின் கோர்ட்னி வால்ஷ் (7 முறை, 37 இன்னிங்ஸ்) ஆகியோருடன ஹோல்டர் டாப்-5ல் இடம் பிடித்துள்ளார்.

Related Stories: