×

கொரோனா பாதிப்பு: 8 லட்சத்தை நெருங்கியது.!ஒரே நாளில் 26,500 பேர் பாதித்து புதிய உச்சம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பின் வேகம் சற்றும் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 26,506 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கியது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 8 நாட்களாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கு அதிகமாக இருக்கும் நிலையில், முதல் முறையாக பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 802 ஆக அதிகரித்தது.

இதுவே மாலையில் மாநில அரசுகள் அளித்த புள்ளி விவரத்தின்படி, நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 475 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 21,604 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 95 ஆயிரத்து 512 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 76 ஆயிரத்து 685 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் சதவீதம் 62.42 ஆக அதிகரித்துள்ளது.

*  நாடு முழுவதும் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
* இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 24 ஆயிரத்து 491 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 659 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சப்படத் தேவையில்லை. அதிகளவில் பரிசோதனை செய்வதாலே பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறி உள்ளார்.



Tags : Corona ,Harms , Corona, India
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...