×

கொரோனாவை விட கொடூர காய்ச்சல்? சீனா பொய் செய்தி

ஷாங்காய்: கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய காய்ச்சல் பரவுவதாக அங்குள்ள தனது நாட்டு மக்களை சீன அரசு எச்சரித்த நிலையில், அது பொய் செய்தி என கஜகஸ்தான் அரசு மறுத்துள்ளது. கஜகஸ்தானில் உள்ள சீன தூதரகம் நேற்று தனது வீசேட் சமூக வலைதள கணக்கில், ‘மத்திய ஆசிய நாடுகளில் கொரோனாவை விட பயங்கரமான காய்ச்சல் பரவி வருகிறது. அந்த காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருகின்றனர். அத்யுரா, அக்டோப், ஷிம்கென்ட் நகரங்களில் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. எனவே, சீன மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என எச்சரித்தது.

இத்தகவல் பெரும் பீதியை கிளப்பிய நிலையில், சீன தூதரக தகவலை கஜகஸ்தான் அரசு மறுத்துள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘பொய் செய்தியை அடிப்படையாக கொண்டு சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன மீடியாக்களில் வெளியான தகவல் உண்மையில்லை’ என விளக்கம் தந்துள்ளது.

Tags : China , Corona, fever, China
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...