கொரோனாவால் பலியானோரில் 43 சதவீதம் பேர் 30-59 வயதுக்குட்பட்டோர்: மத்திய சுகாதாரத்துறை தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பலியானவர்களின் பட்டியலை பார்க்கும் போது கிட்டதிட்ட 43 சதவீதம் பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.  கொரோனா நோய் தொற்று தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய சுகாதார துறை வெளியிடும் புள்ளி விபரங்களின்படி, இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு பதிவாகி ஐந்து மாதங்களுக்கும் மேலான நிலையில், நோய்த்தொற்றால் இறந்தவர்களில் 30 முதல் 59 வயதுடையவர்களில் 43 சதவீதம் பேர் உள்ளனர். 45 வயதிற்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் இந்திய மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களின் இறப்பு விகிதம் 85 சதவீதமாக உள்ளது. குறிப்பாக 30 முதல் 44 வயது மற்றும் 45 முதல் 59 வயதிற்குட்பட்பட்ேடாரில்  43 சதவீத இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

45 முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்களில் இறப்புகள் 71 சதவீதமாக உள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, 7.67  லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 2.69 லட்சத்திற்கும் அதிகமானோர் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 62.09 சதவீதமாக உள்ளது.

வயசும் ெகாரோனா பலியும்

வயது    மக்கள் ெதாகை பங்கு    ஜூலை 9 வரை பலி    மே 21 வரை பலி

14 வயதுக்குட்பட்டோர்    35%    1%    0.5%

15 முதல் 28 வரை    18%    3%    2.5%

30 முதல் 44 வரை    22%    11%    11.4%

45 முதல் 59 வரை    15%    32%    35.1%

60 முதல் 74 வரை    8%    39%    40.2%

75 வயதுக்கு மேல்    2%     14%    10.3%

Related Stories: