×

ரயில் நிலையத்தில் நாப்கின்!

இந்தியாவில் முதன்முறையாக போபால் ரயில்வே ஸ்டேஷனில் சானிடரி நாப்கின்களுக்கான எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஹேப்பி நாரி என்று பெயரிடப்பட்ட மெஷின் ஜனவரி முதல்தேதியிலிருந்து செயல்படத் தொடங்கியுள்ளது. ஐந்து ரூபாய்க்கு இரண்டு நாப்கின்களைப் பெறும் இதனை தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஆருஷி பராமரிக்கிறது.

இந்த மெஷினில் 75 நாப்கின்களைச் சேமிக்க முடியும். மெஷினை பராமரித்து நாப்கின்களை ரீபில் செய்ய பெண் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடங்கிய மூன்று நாட்களில் 2 ஆயிரம் நாப்கின்கள் விற்கப்பட்டுள்ளன. விரைவில், பயன்படுத்திய நாப்கின்களை அழிக்கும் எந்திரத்தையும் நிறுவ ரயில்வே யோசித்து வருகிறது. இது இந்தியா முழுக்க அமுலாகும்போது மாதவிடாய் தூய்மை பற்றிய பெண்களின் பயம் தீரும்.

- ரோனி

Tags :
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்