அரியலூர் பகுதி கடைகளில் காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

அரியலூர்: அரியலூர் பகுதி கடைகளில் காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் அபராதம் விதிக்கப்பட்டது. அரியலூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என உணவு பாதுகாப்புத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். அதன்படி அரியலூர் கடைவீதி, செந்துறை சாலை பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் நடராஜன், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வசந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது 3 கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் காலாவதியான பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு தலா ரூ.2,000 வீதம் அபராதம் விதித்தனர். மேலும் கடை பணியாளர்கள், பொருட்கள் வாங்க வந்தவர்களிடமும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

Related Stories: