×

இந்தியாவில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் : பிரதமர் மோடி உறுதி!!

போபால் : சூரிய சக்தி மின்சாரம் தற்காலத்திற்கு மட்டுமின்றி, 21ம் நூற்றாண்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய உறுதியான தூய்மையான மற்றும் பாதுகாப்பான எரிசக்தி வளமாக திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள ரூ.750 மெகா வாட் திறன் கொண்ட  ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் சூரிய மின்சக்தி பூங்கா திட்டத்தை மோடி திறந்து வைத்தார். மொத்தம் 1,500 ஹெக்டேர் பரப்பளவுக் கொண்ட சூரிய எரிசக்தி பூங்காவினுள் 500 ஹெக்டேர் பரப்பளவில் ஒவ்வொன்றும் தலா 250 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 3 சூரிய மின்சக்தி அமைப்புகள் இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக பேசிய நரேந்திர மோடி, சுயசார்பு இந்தியா என்ற நிலையை எட்ட வேண்டி உள்ளது என்றார். மின் உற்பத்தியிலும் சுயசார்பு தன்மையை அடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பொருளாதார வளர்ச்சியா அல்லது சுற்றுசூழல் பாதுகாப்பா என்பதில் உலக நாடுகள் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளதாக மோடி கூறினார். இந்தியாவில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தூய்மையான எரிசக்தியை வழங்குவதே அரசின் குறிக்கோள் என்று தெரிவித்தார்.தூய்மான எரிசக்தியின் பலனை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் மட்டுமின்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Tags : India , India, development, projects, environment, PM Modi, pledged
× RELATED நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில்...