×

கொடைக்கானலில் தொடர் மழை; வெள்ளைப்பூண்டு விதைப்பு தீவிரம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளைப்பூண்டு விதைப்பு பணியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் காரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீன்ஸ், பீட்ரூட், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட மலைப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்வதால், மேல்மலைப்பகுதி பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை, போளூர் உள்ளிட்ட மேல் மழை மலைப்பகுதிகளிலும் பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளிலும் மலைப்பயிர்களுக்கு விதைப்பு தொடங்கியுள்ளது. மழை தொடர்ந்தால் இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு 60 சதவீத நிலங்களில் மட்டுமே வெள்ளைப்பூண்டு பயிரிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர். குறிப்பாக மன்னவனூர் பகுதியில் வெள்ளைப்பூண்டு விதைப்பு தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்ததால், வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் குடிநீர் பஞ்சம் தீரும் என தெரிவித்துள்ளனர்.

Tags : sowing ,Kodaikanal ,Garlic , Continuous rain in Kodaikanal; Intensity of garlic sowing
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்