×

நெருங்கியவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி : ஜார்கண்ட் முதல்வரை தொடர்ந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்!!!

பெங்களூரு : கர்நாடக முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். முதல்வர் எடியூரப்பா சில நாட்கள் வீட்டில் இருந்தே பணிகளை தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 2062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா படித்தோர் எண்ணிக்கை 28,877 ஆக அதிகரித்துள்ளது.

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் தாக்கும் கொரோனா, முதல்வர் அலுவலகத்தையும் விட்டுவைக்கவில்லை. கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த 10க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாநில முதல்வர் எடியூரப்பா, தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இதே போன்று அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னைத் தானே தனிமைப்படுத்தப்படுத்திக் கொண்டார். முதல்வர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் கருதப்படுகிறது. தமிழகத்திலும் 3 அமைச்சர்கள் மற்றும் 8 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் தமிழக முதல்வர் பழனிசாமியும் தனிமைப்படுத்திக் கொள்வது இன்றியமையாதது.


Tags : Yeddyurappa ,Eduyurappa ,Karnataka ,home ,Jharkhand ,Echo of Corona Infection , Close, Corona, Infection, Jharkhand, CM, Karnataka, CM, Yeddyurappa
× RELATED கர்நாடகா பக்தர்களுக்காக...