×

திருச்சி கடைவீதிகளில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா: கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

திருச்சி: திருச்சி கடைவீதிகளில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பட்டதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி என்.எஸ்.பி சாலை, பெரிய கடை, சின்னக்கடை வீதி, கம்மாளத் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவில் இருந்து ஜூலை 17ஆம் தேதி அதிகாலை வரை கடைவீதிகள் மூடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கடைவீதிகளில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா ஏற்பட்டதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

திருச்சியில் 1170 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 663 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 1,26,581 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,765 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.



Tags : Corona ,Trichy ,shops ,area , Trichy, Corona
× RELATED திருச்சியில் தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகம் மீது மக்கள் புகார்