×

சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக மதுரை வந்தனர் சிபிஐ அதிகாரிகள்

மதுரை: சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை இன்று தொடங்குகிறது. விஜயகுமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி செல்ல உள்ளனர். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்றவுடன் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்க உள்ளனர்.

Tags : CBI ,investigation ,Madurai , Chathankulam, Criminal Investigations, Madurai, CBI Officers
× RELATED சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்தது...