போடியில் கலப்பட பெட்ரோல் விநியோகம்!: மஞ்சள் நிறத்தில் பெட்ரோல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!!!

தேனி: தேனி மாவட்டம் போடியில் கலப்பட பெட்ரோல் விநியோகப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போடியை அடுத்த தர்மத்துப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மஞ்சள் நிறத்தில் கலப்பட பெட்ரோல் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் பணியில் பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் நிறுவனம், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்குகளை அமைத்தும், உரிமங்களை கொடுத்தும் விற்பனை செய்கின்றன. தொடர்ந்து, பெட்ரோல் பங்க்குகளில் அளவு குறைவு, கலப்படம், பெட்ரோல் வழங்கும் இயந்திரங்கள் மூலமாக மோசடி உள்ளிட்ட பல பிரச்னைகளை பொதுமக்கள் தினமும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் கலப்பட பெட்ரோல் விநியோகப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் விநியோகிக்கப்படும் பெட்ரோல்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் பொதுமக்கள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் போடி நகர் பகுதியில் இயங்கி வந்த 2 பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசு அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கூட பெட்ரோல் வழங்க மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Related Stories: