தொடர்கிறது நீதி போராட்டம்.. நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!!

சென்னை:  நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை,மகன் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

*டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் தற்போது முகாமிட்டுள்ளனர். விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு தற்போது வழக்கின் நடைமுறைகள் குறித்து விசாரித்து வருகிறது.

*இதையடுத்து வழக்கு தொடர்பான கோப்புகளை சிபிசிஐடி அதிகாரிகள்,சிபிஐ வசம் இன்று ஒப்படைக்க உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் சிபிஐ வசம் கோப்புகள் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் வழங்க உள்ளார்.வழக்கு தொடர்பான கோப்புகளை பெற்றதும், முதலில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளது, சிபிஐ.

*பெண் காவலர் ரேவதி முதல் அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.சாத்தான்குளம் சென்று சம்பவம் தொடர்பான அனைத்து இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர்.கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி, இதுவரை 10 போலீசாரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிசிஐடி விசாரணையில் இதுவரை!!

*தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவலர்களால் தாக்கப்பட்டு பலியான விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப் பதிந்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் போலீசார் முத்துராஜ், முருகன் ஆகியோரை கைது செய்தனர்.

*பாதுகாப்பு காரணமாக 5 பேரும் கடந்த 4ம்தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் விசாரணைக்குப்பின் நேற்று முன்தினம் இரவு எஸ்ஐ பால்துரை, ஏட்டுகள் செல்லத்துரை, சாமித்துரை, போலீசார் வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: