சீன எல்லையோரம் பதற்றம் தணிந்த நிலையில், ரோந்து பணிகளை மீண்டும் இந்தியா தொடங்குவதாக இராணுவ வட்டாரங்கள் அறிவிப்பு!!!

பீஜிங்:  சீன எல்லையோரம் லடாக்கில் பதற்றம் தணிந்த நிலையில், ரோந்து பணிகளை மீண்டும் தொடங்குவதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.  லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய-சீன இராணுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

சீனா தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டனர். இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இருநாட்டு படைகளும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 2 கி.மீ தொலைவிற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். மேலும், சீனப் படைகள் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களை கலைத்து விட்டு வெளியேறியதை செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, ஃபிங்கர்ஸ் மலைத் தொடர்களில் இந்தியா மீண்டும் தனது ரோந்து பணிகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், லடாக் எல்லையில் பதற்றம் தணிந்து, நிலைமை சீரடைந்து வருவதால், எல்லை நிலவரங்களை மீண்டும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தப்போவதாக இந்திய இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: