புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272-ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 637-ஆக உள்ள நிலையில் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 618 உயர்ந்துள்ளனர்.