துயரத்திலும் சற்று ஆறுதல்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 5 லட்சத்தை எட்டுகிறது!!

புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 475 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,67,296-லிருந்து 7,93,802-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,129-லிருந்து 21,604-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,76,378-லிருந்து 4,95,513-ஆக உயர்ந்துள்ளது.  நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,76,685 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,30,599 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,27,259 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 9,667 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1,26,581 பேருக்கும், டெல்லியில் 1,07,051 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் - 151

ஆந்திர பிரதேசம் - 23814

அருணாச்சல பிரதேசம் - 302

அசாம் - 14032

பீகார் - 13944

சண்டிகர் -523

சத்தீஸ்கர் - 3675

தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 411

டெல்லி - 107051

கோவா - 2151

குஜராத் - 39194

அரியானா - 19369

இமாச்சல பிரதேசம் - 1140

ஜம்மு - காஷ்மீர்- 9501

ஜார்க்கண்ட் -3246

கர்நாடகா - 31105

கேரளா -6534

லடாக் - 1055

மத்திய பிரதேசம் - 16341

மகாராஷ்டிரா - 230599

மணிப்பூர் - 1450

மேகாலயா -113

மிசோரம் - 197

நாகலாந்து - 673

ஒடிசா -11201

புதுச்சேரி - 1151

பஞ்சாப் - 7140

ராஜஸ்தான் - 22563

சிக்கிம் - 134

தமிழ்நாடு - 126581

தெலுங்கானா - 30946

திரிபுரா - 1776

உத்தரகாண்ட் - 3305

உத்தர பிரதேசம் - 32362

மேற்கு வங்காளம் - 25911

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-4161

மொத்தம் - 7,93,802

Related Stories: