சென்னையில் காவல் ஆய்வாளருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்: காவல் துறை திருந்தக் கோரி ஆடியோ வெளியீடு!!!

சென்னை:  சென்னையில் போலீஸ் வாகன சோதனையில் நேரிட்ட மோசமான அனுபவம் குறித்து காவல் ஆய்வாளர் ஒருவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சாத்தான் குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை குறித்து சிபிஐ விசாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடம் போலீசார் அத்துமீறுவது, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவது போன்ற அடாவடிகள் இன்னும் குறையவில்லை என்று விளக்குகிறது இணையத்தில் வைரலாகும் இந்த ஆடியோ.

இதனை காவல் ஆய்வாளர் ஒருவரே வெளியிட்டு, காவல் துறையில் நடைபெறும் நிலைகளை அறிய செய்துள்ளார். காவல் துறையில் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் கீழ்மட்ட காவல் அதிகாரிகள் திருந்தாவிட்டால், காவல் உயர் அதிகாரிகளும் பதிலளிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும் என்று காவல் ஆய்வாளர் அவருடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். சாத்தான் குளம் சம்பவத்திற்கு பின்னர், காவல் துறை மீதான மதிப்பு கேள்விக்குறியான நிலையில், காவல் ஆய்வாளரின் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சாத்தான் குளம் சம்பவம் போல பல இடங்களில் போலீசார் அத்துமீறுவதாக நாம் அனைவரும் கேள்விப்பட்டுள்ளோம். இதனைத்தொடர்ந்து, பல்வேறு உயர் அதிகாரிகள் மற்ற காவலர்களுக்கு பலமுறை அறிவுரைகள் வழங்கினாலும் இன்னும் பலர் திருந்தாத நிலைதான் உள்ளனர். இதனால், காவல் துறையினரே மற்ற காவலரை தரக்குறைவாக நடத்தும் நிலையில், பொதுமக்களின் நிலைமையை நினைத்து பார்க்கவே முடியவில்லை என அந்த காவல் ஆய்வாளர் தனது வருத்தங்களை ஆடியோவில் பதிவிட்டுள்ளார்.

கல்லூரி மாணவியை ஆபாசமாக பேசிய விவகாரம்:  உதவி பொறியாளர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக செல்போனில் பேசிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி புகார் ஒன்றினை அளித்திருந்தார். அதில் மண்ணடியில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக தன்னார்வலர் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டிருந்ததாகவும், அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்போனில் தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும் புகார் அளித்திருந்தார்.

அது தொடர்பான ஆடியோவையும் போலீசாரிடம் சமர்பித்திருந்தார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உதவி பொறியாளர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் ஆடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை செய்த எஸ்பிளனேடு அனைத்து மகளிர் போலீசார் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மீது பாலியல் தொந்தரவு மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அயனாவரத்தில் வசித்து வரும் கமலக்கண்ணனை கைது செய்ய போலீசார் சென்றபோது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள உதவி பொறியாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: