பணிச்சுமையால் சிறப்பு எஸ்ஐ தற்கொலை

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அடுத்த ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலைய சிறப்பு எஸ்.ஐ ரவி (53). கண்ணமங்கலம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். மனைவி, ஒரு மகன், மகள் சென்னையில் வசித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு பணிக்காக அமிர்தி சோதனைச்சாவடியில் கடந்த 3 மாதமாக இரவு, பகலாக ரவி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் போலீஸ் குடியிருப்பில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: