×

குப்பைகளை சேகரித்து விற்று மூதாட்டி சேமித்த பணத்தை தரமறுத்து அலைக்கழித்த வங்கி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

வில்லியனூர்: புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பொறையூர் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இங்கு 600க்கும் மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். பொறையூரை சேர்ந்த கிருஷ்ணவேணி (90), குப்பை சேகரித்து விற்று கிடைத்த பணத்தை சேமித்து வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வங்கிக்கு சென்று தான் சேமித்த ரூ.10,500ஐ கேட்டுள்ளார். ஊழியர்கள், வங்கியில் பணம் இல்லை, நாளை வாருங்கள் என கூறி திருப்பி அனுப்பினர்.

இப்படி பலமுறை வங்கிக்கு அலைந்தும் பணம் தரவில்லை. இதனால், நேற்று பேரனுடன் சென்று பணம் கேட்டபோதும் வங்கியில் பணம் இல்லை என்று கூறிவிட்டனர். கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை இல்லை என்று கூறியதால் மனஉளைச்சல் அடைந்த மூதாட்டி கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்ைப ஏற்படுத்தி வருகிறது.  வங்கி ஊழியர்கள் கூறுகையில், ‘கொரோனா காலம் என்பதால் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டோம்’ என்றனர்.


Tags : Bank ,grandparents , Rubbish, Money saved, Money bank, Social website, Video viral
× RELATED திருச்சியில் எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் 22...