சென்னையில் இருந்து 3 ஆயிரம் பேர் சொந்த ஊர் சென்றனர் தமிழகத்தில் இருந்து இனி சிறப்பு ரயில்கள் கிடையாது: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கடைசி ரயில் நேற்று இயக்கப்பட்டது

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோத்பூர் மற்றும் மேற்கு வங்கத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு 6 கட்டங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படாததால் வெளிமாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர். நேற்றும் சென்ட்ரல்-ஜோத்பூர்க்கு இடையேயும், சென்ட்ரல்- மேற்கு வங்கத்துக்கும் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வட மாநிலத்தவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது ஷர்மிக் ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் சோதனை செய்யப்பட்டது. மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேற்று இயக்கப்பட்ட கடைசி ரயில் என்றும், அதன் பிறகு சிறப்பு ரயில்கள் இயக்கப்படாது என்று கூறப்படுகிறது.

Related Stories: