ஒப்பந்தபடி ஜூலை 1ல் தவணைக்காலம் தொடங்கிய நிலையில் கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்காமல் ஆந்திரா அடம்: தமிழக அரசு கடிதம்

சென்னை: கண்டலேறு அணையில் 20 டிஎம்சிக்கு மேல் நீர் இருப்பு உள்ளது. ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் தர வேண்டும். ஆனால், 10 நாட்களாகியும் தமிழகத்துக்கு ஆந்திர அரசு தண்ணீர் திறக்கவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும்  நான்கு ஏரிகளில் 4.9 டிஎம்சி நீர் இருப் பு உள்ளது. இந்த நீரைக்கொண்டு 2 மாதங்கள் வரை குடிநீர் தேவைக்கு சமாளிக்க முடியும். எனவே, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் ஆந்திர நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தவணை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆந்திர அரசு சார்பில் ஒப்பந்தப்படி தண்ணீர் திறக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த கடிதத்துக்கு பதில் அளிக்கவில்லை. எனவே, ஆந்திர நீர்வள அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்பிறகும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழக அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: