×

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கோரிய வழக்குகள் விசாரணை தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மருத்துவ படிப்புகளில்  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்குகளை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக, திராவிடர் கழகம், அதிமுக, மதிமுக, பாமக, தமிழக அரசு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது.

திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு  இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது என்றார். அவசரம் கருதி இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற முடிவுகளை தெரிந்த பின் விசாரிக்கலாம் எனக் கூறி விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : High Court ,hearing ,court , Medical study, other backward classes, 50% quota case, hearing, postponement, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...