விவாகரத்து பெற்றவரை மிரட்டி மீண்டும் கட்டாய திருமணம் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

சென்னை: மதுரவாயல் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (34). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றனர். பிரித்திவிராஜ் 2வது திருணம் செய்ய முடிவு செய்தார். இதையறிந்த முதல் மனைவியின் சகோதரர்களான தாமோதரன், இளையராஜா உட்பட 5 பேர் பிரித்திவிராஜை காரில் மாமல்லபுரம் கடத்தி சென்று, ஒரு வீட்டில் அடைத்து வைத்து, மீண்டும் சத்யாவுடன் திருமணம் செய்து வைத்தனர்.

இதனால், மனமுடைந்த பிரித்திவிராஜ் அங்கிருந்து தப்பித்து நேற்று காலை மதுரவாயலில் உள்ள தனது வீட்டிற்கு வந்து, உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதையடுத்து, மதுரவாயல் போலீசார் பிரித்திவிராஜை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி சத்யா, தாமோதரன், இளையராஜா உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: