திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், திமுகவின் தீர்மானக்குழு செயலாளருமான குழந்தை தமிழரசன் (64) உடல்நல குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே எடசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தை தமிழரசன். திமுக முன்னாள் எம்எல்ஏவான இவர், கடந்த ஜூன் 30ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். எம்ஏ.பிஎல் பட்டம் பெற்று விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றினார். திமுகவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு முழு அரசியலுக்கு வந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 1996ல் இருந்து 2001 வரை விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவாக பணியாற்றினார். திமுகவில் தீர்மானக்குழு செயலாளராக இருந்து வந்தார்.

Related Stories: