ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு சாலை வரியில் விலக்கு: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு காலாண்டு சாலை வரியில் விலக்கு அளிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கால் தனியார் பேருந்து இயக்குனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளுக்கு, காலாண்டு சாலை வரியாக ஒரு பேருந்துக்கு, ஒரு லட்சத்து எட்டாயிரம் செலுத்தும்படி அரசு கூறியுள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆகவே இந்த வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: