விரைவில் சவரன் ரூ.38,000 எட்டும் தங்கம் விலை புதிய உச்சம்

சென்னை: தங்கம் விலை கடந்த 2 மாதமாக உயர்ந்து வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை நிகழ்த்தியும் வருகிறது. கடந்த‌ 1ம்தேதி ஒரு கிராம் ரூ.4,684க்கும், சவரன் ரூ.37,472க்கும் விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு கடந்த 2ம் தேதி, 3ம் தேதி, 4ம் தேதி, 6ம்தேதி தங்கம் விலை சவரன் ரூ.36,976க்கு விற்கப்பட்டது‌. 7ம்தேதி சவரன் ரூ.37,008க்கும் விற்கப்பட்டது. நேற்றும் முன்தினம் ஒரு கிராம் ₹4,692க்கும், சவரன் ரூ.37,536க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒரு நாள்கூட நீடிக்கவில்லை. அந்த சாதனையையும் நேற்றைய விலை முறியடித்தது.

அதாவது நேற்று கிராமுக்கு ரூ.26 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,718க்கும், சவரனுக்கு ரூ.208 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,744க்கும் விற்கப்பட்டது. இந்த விலை தங்கம் விற்பனை விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையையும் படைத்தது. கொரோனா பாதிப்பால் தேதி தள்ளி வைக்கப்பட்ட பல திருமணங்கள் தற்போது மெல்ல, மெல்ல நடக்க தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து வருவது திருமணம் உள்ளிட்டவற்றிற்கு நகை வாங்க நினைப்போரை மேலும் பாதிப்படைய செய்துள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை சவரன் ரூ.38,000த்தை தொட வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: