நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த உக்கம் பெரும்பாக்கத்தில் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும், சனி, ராகு, கேது பகவான்களுக்கும் நடுநாயகனாக அமர்ந்து அருள்பாளிக்கும் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கால், அடைக்கப்பட்டு இருந்த நட்சத்திர திருக்கோயிலில் அரசின் அறிவிப்பையொட்டி திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து 4 மாதங்களுக்குப் பிறகு சங்கட ஹர சதுர்த்தி விழா நேற்று முன்தினம் மாலை சிறப்பாக நடந்தது. முன்னதாக கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும், ராகு, கேது, சனி பகவான்களுக்கும் அபிஷேகம் நடந்தது. பின்னர் நட்சத்திர விருட்ச விநாயகருக்கு பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தி, மலர்களால் அலங்காரம் செய்து, மகாதீபாரதனை நடந்தது.

Related Stories: