செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் தேசிய உயர்மட்ட மத்திய மருத்துவ குழு திடீர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வரும் நிலையில், அதை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு தேசிய உயர்மட்ட மத்திய மருத்துவக்குழு, செங்கல்பட்டு நகர பகுதியில் நேற்று திடீர் ஆய்வு செய்தது. மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா, இணை இயக்குநர் ராஜேந்திர ரத்னூ, இணை இயக்குனர் சுபோத் யாதவா, நீர் மேலாண்மை இணை இயக்குனர் ஸ்வரூப் குமார் சஹூ, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மேலாண் இயக்குநர், சதிஷ்வாக் ஆகியோர் கொண்ட குழுவினர் செங்கல்பட்டு நகர பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நத்தம், தட்டான்மலை தெரு, முதலியார் தெரு, பெரியநத்தம், மேட்டுத்தெரு உள்பட பல பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்து, அங்குள்ள மருத்துவர்களிடம் கொரோனா சிகிச்சை, கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். இதில், கலெக்டர் ஜான்லூயிஸ், எஸ்பி கண்ணன், டீன் சாந்திமலர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: