×

இந்தியாவில் கொரோனா சமூக பரவல் ஏற்படவில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: ‘‘இந்தியாவில் கொரோனா சமூக பரவல் ஏற்படவில்லை’’ என மத்திய சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை மொத்தம் பாதிப்பு 7 லட்சத்து 67,296 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 487 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கையானது 21,129ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4,76,377 பேர் குணமடைந்துள்ளனர். 2,69,789 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் சதவீதம் 62.08 ஆக உள்ளது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அளித்த விளக்கத்தில், ‘‘உலக அளவில் இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவு. இங்கு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களே 53 சதவீதம் இறந்துள்ளனர். தற்போது நாள் ஒன்றுக்கு 2.6 லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவல் ஏற்படவில்லை. சில இடங்களில் அப்பகுதி மக்களிடம் அதிகளவில் பரவல் ஏற்பட்டுள்ளதே தவிர, சமூக பரவல் கட்டத்தை இந்தியா எட்டவில்லை’’ என கூறப்பட்டுள்ளது. lமகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா மற்றும் தெலங்கானா உட்பட 8 மாநிலங்களில் மட்டுமே நாட்டின் 90 சதவீத கொரோனா பாதிப்பு உள்ளது. l80 சதவீத நோயாளிகள் சென்னை உட்பட 49  மாவட்டங்களில் உள்ளனர்.

Tags : India ,Corona ,government ,Central , India, Corona, Social Distribution, Central Government, Project
× RELATED இந்தியாவில் இதுவரை 1,93,58,659 கொரோனா மாதிரிகள் பரிசோதனை.: ஐசிஎம்ஆர் தகவல்