×

சிக்கமகளூரு அருகே நண்பரின் எஸ்டேட்டில் குடும்பத்துடன் ரகசியமாக தங்கியிருக்கும் குமாரசாமி: தனிமைப்படுத்தி கொண்டுள்ளாரா?

சிக்கமகளூரு: கொரோனா தொற்று உறுதியான எம்.எல்.ஏ., எம்.எல்.சி. தன்னை சந்தித்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில் சிக்கமகளூரு அருகே உள்ள தனது நண்பரின் எஸ்டேட்டில் குடும்பத்தினருடன் முன்னாள் முதல்வர்  குமாரசாமி ரகசியமாக தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மாஜி முதல்வர் குமாரசாமியின் நண்பருக்கு சொந்தமான எஸ்டேட் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா  தாலுகாவில் உள்ள தலவாணி என்ற இடத்தில் இருக்கிறது. அந்த எஸ்டேட்டுக்கு  குமாரசாமி தனது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் ரகசியமாக வந்து தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, சமீபத்தில் எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா, எம்.எல்.சி. போஜேகவுடா ஆகிய இருவரும் குமாரசாமியை பெங்களூருவில் சந்தித்து பேசியதாகவும், தற்போது அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், குமாரசாமி தன்னையும், குடும்பத்தினரையும் தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்டேட்டில் தங்கி இருப்பதாகவும் தெரியவருகிறது.

Tags : Kumaraswamy ,estate ,Chikkamagaluru , Chikkamagaluru, friend's estate, family, kumaraswamy, loneliness
× RELATED இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி,அவரது குடும்பத்தினருக்கு கொரோனா