ராணா கபூரின் ரூ.2,800 கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி:  யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கொடுத்த கடனில், ரூ.20,000 கோடி அளவுக்கு வாராக் கடனாக மாற்றப்பட்டது. இதில், ரூ 4,300 கோடி முறைகேட்டில் ராணா கபூர் குடும்பத்தினர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இந்தியா, லண்டனில் உள்ள அவரது பல சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ராணாவுக்கு சொந்தமான ரூ.2,800 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.

Related Stories: