கொரோனா தடுப்பு மருந்து இந்தியா-அமெரிக்கா இணைந்து ஆயுர்வேத மருத்துவ சோதனை

வாஷிங்டன்:  இந்திய-அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் சார்பில் அமெரிக்க, இந்திய ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்களுக்கான வீடியோ கான்பரன்சிங் நேற்று நடந்தது. இதில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது, ஆயுர்வேத மருத்துவ சோதனைகளை கூட்டு முயற்சியில் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் கூறுகையில், ‘‘கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பணிகளில் இந்திய, அமெரிக்க நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. இதன் அடுத்தக்கட்டமாக இரு நாடுகளிலும் உள்ள ஆயுர்வேத மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஒருங்கிணைந்து கொரோனாவை தடுப்பதற்கான பரிசோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இருநாட்டு விஞ்ஞானிகளும் தங்களுடைய ஆய்வுகள், சோதனை முடிவுகளை பரிமாறி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில், குறைந்த விலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிறந்த நாடாக திகழ்கிறது’’ என்றார்.

Related Stories: