×

ம.பி.யில் 1,500 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை வரும் 10ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் ..!!

டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் 1,500 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி வரும் 10ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த திட்டம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் அளவிலான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில் 1,500 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக, சூரிய சக்தியை நாடெங்கிலும் விரைவாக, பரவலாகப் பயன்படுத்த கொள்கைத் திட்டங்களை வகுத்து, கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைத்து, திறன்கொண்ட மற்றும் திறன் அற்றவர்களுக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியனவாகும்.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு சூரிய மின்சக்தி அளிக்கக்கூடிய பங்கை உணர்ந்தும், சூரிய மின்சக்தி உபகரணமான போட்டோ ஒல்டிக்களின் விலை குறைந்துள்ளதாலும், சூரிய சக்தியை மின் கிரிட்டோடு இணைக்கும் சாத்தியம் முழுமையாக உள்ளதாலும், புதிய சூரிய மின்சக்தி அமைப்புகள் நாட்டில் வெகுவாக செயல்படுகிறது

மேலும் வருகின்ற 2022க்குள் 100 கிகாபைட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அடைய புதிய மற்றும் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி அமைச்சகம் பல திட்டங்களை உருவாக்கியுள்ளது. சில வாய்ப்புகளாக சூரிய மின்சக்தி அமைப்புகளை இணைப்பது, உற்பத்தி சார்ந்த ஊக்கங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தட்டுப்பாடுகளை நீக்க நிதி அளித்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி வரும் 10ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வருகின்ற 2022 ஆம் ஆண்டில் நிறுவக்கூடிய  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 175 ஜிகாவாட் என்ற இலக்கை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த திட்டம் எடுத்துக்காட்டுகிறது.

Tags : Modi , MW Solar Power Project, Prime Minister Modi
× RELATED உள்நாட்டு உற்பத்தி விகிதம்...