சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு: சிபிசிஐடி ஐஜி

மதுரை: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி தெரிவித்துள்ளார். மாஜிஸ்திரேட் பறிமுதல் செய்த சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி சங்கர் பேட்டியளித்துள்ளார். சிசிடிவி பதிவுகளை நீதிமன்றமும், தடயவியல் துறையும் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்த தலைமை காவலர் ரேவதியும் இன்று இரண்டாவது முறையாக தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.

Related Stories: