×

சுற்றுலா டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

*    சுற்றுலா என்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒரு மாற்றம் தந்து உற்சாகப்படுத்துவதுதான். அதற்கான செலவு வீண் செலவல்ல. அது  அவசியச் செலவுதான். சுற்றுலா அல்லது ஆன்மிகப் பயணம் எதுவென்றாலும் அதெற்கென பணத்தை ஒதுக்கி சேமிக்க வேண்டும்.

*    செல்லும் இடத்திற்கான பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்துவிட வேண்டும். எந்த ரயில் அல்லது பஸ், கோச், இருக்கை  எண்கள் எல்லா விவரங்களும், குடும்பத்தில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

*    என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும். நாம் போகும் இடங்களில் இருந்து என்ன வாங்கிவர வேண்டும் என்று பட்டியல்  போட்டுக்கொள்வது அவசியம். எதையும் மறந்து விடாமல் இருக்க இது உதவும்.

*    என்ன இடங்கள் அவசியம் பார்க்க வேண்டியவை என்ற தகவல்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். தேவைப்படும் துணிமணிகள்,  சோப்பு, பவுடர், பொட்டுகள் எல்லாவற்றையும் அவசியம் எடுத்துச்செல்ல வேண்டும். போகும் இடத்தில் தேடி வாங்க முடியாது.

*    தேவையான பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஏ.டி.எம்.கார்டை உடன் கொண்டு சென்றால் அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்.

*    அடையாள அட்டை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*    தங்க, வைர நகைகளை அணிவதைத் தவிர்த்து எளிய அளவான நகை அணிவது பாதுகாப்பானது. வீட்டில் உள்ள விலை உயர்ந்த  நகைகள், வெள்ளிப் பாத்திரங்களை வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துவிட்டுப் போனால் பயணம் நிம்மதியாக இருக்கும்.

*    உறவினர், நண்பர் ஊருக்குச் செல்வதாக இருந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களின் சௌகரியத்தை தெரிந்துகொண்டு  பயணம் மேற்கொள்ள வேண்டும்.

*    பயணத்தின்போது சாப்பிடுவதற்கு வீட்டிலேயே உணவு தயாரித்துக்கொண்டு சென்றால் சுகாதாரமானது. சிக்கனமும்கூட.

*    தேவையான மருந்து, மாத்திரை எடுத்துச்செல்ல வேண்டும்.

- ஆர்.மீனாட்சி,
திருநெல்வேலி.

Tags :
× RELATED முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் பெற!