+2 தேர்வு எழுதாமல் விடுபட்ட 34,000 பேருக்கும் இணையத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு

சென்னை: +2 தேர்வு எழுதாமல் விடுபட்ட 34,000 பேருக்கும் இணையத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படுகிறது. 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். விடுப்பட்ட தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. +2 விடுபட்ட தேர்வு 27ம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. விடுபட்ட +2 தேர்வுகளை 34,842 மாணவர்கள் எழுத உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் மார்ச் 24ஆம் தேதி நடைபெற இருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான இறுதித்தேர்வை 34,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத முடியவில்லை. காரணம் ஊரடங்கினால் பேருந்துகள் இயங்கவில்லை என்று மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தேர்வை மீண்டும் நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முழுவதுமாக ரத்து செய்துவிட்ட பின்பாக கூட பனிரெண்டாம் வகுப்புக்கான இறுதித்தேர்வு மேற்படிப்பிற்காக நிச்சயமாக தேவைப்படும் என்பதால் அந்த தேர்வை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்திருந்தது. தற்போது வரும் 27ஆம் தேதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.

Related Stories: