கொரோனா பரவலை தடுக்க சென்னை சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைப்பு : இன்று முதல் 10 சிக்னல்களில் சோதனை முறை அமல்!!

சென்னை : சாலையில் வாகனங்கள் நிற்கும் போது, கொரோனா பரவாமல் தடுக்க சிக்னல்களின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 72,500 ஆக உள்ளது. தமிழகத்தில் வருகிற 31ம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் சில தளர்வுகளை தளர்த்தி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரசு அறிவித்தது. இதையடுத்து சென்னையில் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையின் முக்கிய சாலைகளிலும் வாகனங்கள் பெருக்கெடுத்து ஓடின.

இந்நிலையில், சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் 60 நொடிகளுக்கு மேல் வாகன ஓட்டிகள் காத்திருப்பதால் கொரோனா பரவும் என அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாகனங்களின் காத்திருப்பு நேரம் 60 நொடியாக குறைக்கப்பட்டு, இன்று முதல் 10 போக்குவரத்து சிக்னல்களில் சோதனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நேரத்தை குறைப்பது மூலம்  போக்குவரத்து சிக்னல்களில் நெருங்கி நிற்பதும், அதன் மூலம் நோய் பரவுவதும் தடுக்கப்படும். சிக்னல்களில் கூட்டம் சேராமல் தடுப்பதற்காக காத்திருப்பு நேரத்தை குறைக்க டிராபிக் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: