கொரோனா சமூக பரவலாக மாறவில்லை; மக்கள் தொகை அதிகம் இருப்பதால்; பாதிப்பு அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது...மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.  உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,67,296-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 21,129 பேர் உயிரிழந்த நிலையில், 4,76,378 பேர் கொரோனா பிடியில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 24,000 பேர்  என்ற கணக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்கு குறித்து டெல்லியில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்குப்பின் செய்தியாளர்களிடம்  பேட்டியளித்த ஹர்ஷ்வர்தன், இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறினர் என்றார். மக்கள்  தொகை அதிகமாக இருப்பதால்தான் பாதிப்பு அதிகமாக இருப்பதுபோல் தெரிகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சில இடங்கள் இருக்கலாம், ஆனால் நாடு முழுவதும் சமூக பரவல் இல்லை என்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் 3வது நாடாக இந்தியா மாறிவிட்டது என்பதை டிவியில் காண்கிறோம். இதை சரியான  கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியம், நாங்கள் உலகின் 2-வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. ஒரு மில்லியனுக்கு எங்கள் பாதிப்பு 538, உலக  சராசரி 1,453 பாதிப்பு என்றார்.

Related Stories: