கொரோனா பாதிப்பில் தொடர்ந்து 2-வது இடம்: தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து 3-வது முறையாக மத்திய குழு ஆய்வு..!!

சென்னை: தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட 3வது முறையாக மத்திய குழு தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்தில் சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சுகாரத்தாரா துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவிட்டு தற்போது, ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் 5 பேர் குழு ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள மாநிலமாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 3-வது முறையாக குழுவை அனுப்பியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றும் இறந்தவர்களின் விவரம் மற்றும் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் கேட்டறியப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள் பற்றியும் கேட்டறியப்பட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, சென்னை புளியந்தோப்பு பகுதியிலும் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். இவர்களுடன் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோரும் பங்கேற்று வருகின்றனர்.

Related Stories: