×

கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் தங்க கடத்தல் விவகாரம்: முதல்வர் பிரனாயி விஜயன் பதவி விலக காங்., கூட்டணி வலியுறுத்தல்!

டெல்லி: கேரளாவில் நடைபெற்ற தங்கக்கடத்தல் மோசடி விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பிரனாயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பிரனாயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவாகரத்திற்கு பொறுப்பேற்று பிரனாயி விஜயன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி சி.பி.ஐ விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது.

இந்நிலையில் முதல்வர் பிரனாயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று தலைநகர் திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்ததாவது, திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் சம்பவத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு உள்ளது. முதல்வருக்கே நேரடி தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக முதல்வருக்கு நெருக்கமான சிவசங்கரன் ஐ.ஏ.எஸ். குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளார்.

இதனை கண்டித்து கேரளா முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. முதல்வர் பிரனாயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தனர். தங்க கடத்தல் விவகாரத்தில் இருந்து முதல்வர் பிரனாயி விஜயன் எளிதில் நழுவிவிட முடியாது என்று வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் எச்சரிக்கை செய்துள்ளார். இந்த விவகாரத்தை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்த தகவல்களை திரட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags : Prannoy Vijayan ,Kerala ,Karnataka , Karnataka Chief Minister Prannoy Vijayan resigns
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...